விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவு

நாகர்கோவில், ஜூன் 5: பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த 2021கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது 4 லட்சத்து 38 ஆயிரத்து 87 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 3 லட்சத்து 66 ஆயிரத்து 341 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். அவர் பெற்ற வாக்குகளில் மொத்தம் 71 ஆயிரத்து 746 வாக்குகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விஜய்வசந்த் 2021 கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் 5 லட்சத்து 76 ஆயிரத்து 37 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். ஆனால் இப்போது நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 5 லட்சத்து 46 ஆயிரத்து 248 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அந்த வகையில் கடந்த மக்களவை தேர்தலைவிட 29 ஆயிரத்து 789 வாக்குகளை குறைவாக பெற்றுள்ளார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிட்டர் ஆல்வின் 2021 தேர்தலில் மொத்தம் 58 ஆயிரத்து 593 வாக்குகளை பெற்றிருந்தார். இப்போது நாம் தமிழர் கட்சிக்கு 52721 வாக்குகள் கிடைத்திருந்தது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சிக்கும் கடந்த தேர்தலைவிட 5872 வாக்குகள் குறைந்துள்ளது. 2021 தேர்தலில் தபால் வாக்குகளுடன் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 92 ஆயிரத்து 346 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த 2024 தேர்தலில் தபால் வாக்குகளுடன் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 32 ஆயிரத்து 657 வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன் கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவு appeared first on Dinakaran.

Related Stories: