கத்தியுடன் வந்த சுயேச்சை வேட்பாளர்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில் கோணம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று நடந்தது. பகுஜன் திராவிட பார்ட்டி சார்பில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் ராஜன் சிங் (60), வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்தபோது அவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் தனது தோளில் சிறிய கைப்பை போன்ற உறைக்குள் கத்தியை வைத்து அணிந்து வந்திருந்தார். கத்தி வைத்திருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ராஜன் சிங்கை போலீசார் வாக்கு எண்ணிக்கை மையத்தின் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். அவர் குல வழக்கப்படி உறைக்கத்தி வைத்துக்கொள்வது இயல்புதான் என வாதிட்டார். ஆனால், போலீசார் அவரை வெளியேற்றினர். விசாரணையில் அவரிடம் சீக்கியர் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. மேலும் அவர் தேவேந்திர குல வேளாளர் என்பதற்கான சலுகைகளை பெற்று வந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறினார்.

The post கத்தியுடன் வந்த சுயேச்சை வேட்பாளர் appeared first on Dinakaran.

Related Stories: