சட்டப்பேரவை இடைத்தேர்தல்; அரியானா முதல்வர் வெற்றி: கல்பனா சோரன் அபாரம்

புதுடெல்லி: மக்களவை தேர்தலுடன் 25 சட்டப்பேரவைகளுக்கு இடைத்தேர்தல் நடந்தன. இதில் அரியானா மாநிலத்தில் முதல்வர் நயாப்சிங் சயானி, கர்னால் தொகுதியில் 41,540 ஓட்டுகள் அதிகம் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் தர்லோச்சன்சிங்கை வீழ்த்தினார். ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா, அங்குள்ள காண்டே இடைத்தேர்தலில் போட்டியிட்டார். அவர் பா.ஜ வேட்பாளர் திலீப் குமார் வர்மாவை விட 27,149 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குஜராத்தில் விஜய்பூர், போர்பந்தர், மனாவதார், காம்பத், வகோடியா ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 5 தொகுதிகளையும் பா.ஜ கைப்பற்றியது. பீகாரில் அஜியான் தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரகாஷ் ரஞ்சன் 30 ஆயிரம் ஓட்டு முன்னிலை பெற்று வெற்றி பெற்றார்.

இமாச்சலில் 6 தொகுதிகளில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 4 ல் காங்கிரசும், 2ல் பா.ஜவும் வெற்றி பெற்றது. கர்நாடகாவில் சோராபூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜாவேணுகோபால் நாயக் வெற்றி பெற்றார். ராஜஸ்தானில் பகிதோரா தொகுதியில் பாரத் ஆதிவாசி கட்சி வேட்பாளர் ஜெய்கிஷன் பட்டேல் வெற்றி பெற்றார். தமிழ்நாட்டில் விளவங்கோடு தொகுதியில் காங்கிரசும், தெலங்கானா செக்கந்திராபாத் கன்டோன்மன்ட் தொகுதியில் காங்கிரசும், திரிபுராவில் ராம்நகர் தொகுதியில் பா.ஜவும், உபியில் நடந்த 4 இடைத்தேர்தலில் தாத்ரவுல், லக்னோ கிழக்கில் பா.ஜவும், கெயின்சாரி, தத்கி தொகுதியில் சமாஜ்வாடியும் வென்றன. மே.வங்கத்தில் 2 தொகுதிகளிலும் திரிணாமுல் வெற்றி பெற்றது.

The post சட்டப்பேரவை இடைத்தேர்தல்; அரியானா முதல்வர் வெற்றி: கல்பனா சோரன் அபாரம் appeared first on Dinakaran.

Related Stories: