பரபரப்பாக தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி ஆலோசனை..!!

டெல்லி: தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்தியா அளவில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகுத்து வருகிறது. இருப்பினும் கருத்துக்கணிப்பு முடிவுகளை விட இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், உ.பி., மேற்குவங்கம், பஞ்சாப் மாநிலங்களில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. மராட்டியத்தில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மராட்டியத்தில் பாஜக கூட்டணி 21 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 38 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.

 

The post பரபரப்பாக தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி – பிரியங்கா காந்தி ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: