ஆட்டுச்சந்தைக்கு சென்று திரும்பிய ஆடு வியாபாரி பரிதாப சாவு

விருதுநகர், ஜூன் 3: திருநெல்வேலி மாவட்டம் வடமலைப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், ஆடுகளை மொத்தமாக சந்தைகளில் வாங்கி வந்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை திருநெல்வேலியில் இருந்து சக வியாபாரிகள் அருணாசலம், அரிகிருஷ்ணன் ஆகியோருடன் லோடு வேனில் திண்டுக்கலில் நடந்த ஆட்டு சந்தைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து கிளம்பி கன்னிசேரியில் இருந்து சிவகாசி செல்லும் ரோட்டில் சென்ற போது, வேனை நிறுத்தி பார்த்துள்ளார்.

வேனின் பின்பகுதியில் இருந்து சக்திவேல் தலை, கைகளில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடன் சிவகாசி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்கைக்கு பிறகு திருநெல்வேலி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பலன்றி சக்திவேல் உயிரிழந்தார். வச்சக்காரப்பட்டி போலீசில் சக்திவேல் மகன் அலெக்ஸ் பாபு அளித்த புகாரில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வண்டிக்குள்ளேயே மயக்கம் ஏற்பட்டு விழுந்து தலை, கை, கால்களில் அடிபட்டிருக்கலாம் என அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆட்டுச்சந்தைக்கு சென்று திரும்பிய ஆடு வியாபாரி பரிதாப சாவு appeared first on Dinakaran.

Related Stories: