பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க அமெரிக்கா முயற்சி: சீனா புகார்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் நடந்த ஷாங்ரிலா பாதுகாப்பு மாநாட்டின் முதல் நாளில் பங்கேற்ற அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின்,பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்துவது குறித்து பேசினார். இரண்டாம் நாள் மாநாட்டில் சீன ராணுவ உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஜிங் ஜியான்பெங் கலந்து கொண்டார். அவர் பேசுகையில்,‘‘பசிபிக் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை தக்க வைப்பதற்கு,ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.

இந்த கூட்டமைப்பில் கையெழுத்திடும்பட்சத்தில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் நாடுகள் இருக்க வேண்டும். அமெரிக்க அமைச்சரின் சொல்லாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கும். அதனால் எந்த பயனும் இருக்காது. இது அமெரிக்காவின் சுயநல புவிசார் அரசியல் நலன்களுக்குதான் உதவும். ஒரு சிறிய வட்டத்தை பெரிய வட்டமாக்கி நேட்டோவுடன் இணைத்து தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என அந்த நாடு விரும்புகிறது. இந்தோ- பசிபிக் உத்தி என்பது பிளவை உருவாக்கி,மோதலை உருவாக்குவதே அதன் திட்டமாகும்’’ என்றார்.

 

The post பசிபிக் பிராந்தியத்தில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க அமெரிக்கா முயற்சி: சீனா புகார் appeared first on Dinakaran.

Related Stories: