திமுக செயற்குழு கூட்டம்

திண்டுக்கல், ஜூன் 2: திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் வடக்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் மாலை கூட்டுறவு நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். திண்டுக்கல் ஒன்றிய குழு தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைவர் கலைஞர் மு கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு பிறந்தநாள் விழாவை கிளைகள்தோறும் கழக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், பொதுக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, காளிதாஸ், கதிரேசன், பொன்ராம், மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர்கள் வெங்கடேசன், பரமேஸ்வரி பாண்டித்துரை, சுற்றுப்புற சூழல் அமைப்பாளர் ராஜசேகர், வர்த்தக அணி பொன் முருகன், நன்றி உரை பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: