சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சுவாமி தரிசனம் சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் வருகை படவேடு ரேணுகாம்பாள் கோயிலில்

கண்ணமங்கலம், ஜூன் 1: படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் சண்முகம் நேற்று அம்மனை தரிசனம் செய்தார். சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சராக இருப்பவர் சண்முகம். இவர் நேற்று சென்னையிலிருந்து கண்ணமங்கலம் அருகே உள்ள அனந்தபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்கிருந்து காரில் போலீஸ் பாதுகாப்புடன் படவேடு ரேணுகாம்பாள் கோயில், யோக ராமர் கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில், கைலாச வினாயகர் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் சார்பில் மாலையணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் ெஹலிகாப்டர் மூலம் சென்னைக்கு திரும்பி சென்றார்.
அவரை படம் எடுக்கவோ, பேட்டி காணவோ பாதுகாவலர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சுவாமி தரிசனம் சென்னையிலிருந்து ஹெலிகாப்டரில் வருகை படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் appeared first on Dinakaran.

Related Stories: