கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவில்பட்டி, ஜூன் 1: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி தேசிய மாணவர் படை மற்றும் தமிழ்நாடு சைகை கம்பெனி சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சாத்தூர் வெஸ்டிஜ் மார்க்கெட்டிங் நிறுவன மேலாளர் மாரிமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புகையிலை உபயோகப்படுத்துவதினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மனித உடல் உறுப்புகளின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துரைத்தார். தேசிய மாணவர் படை மாணவி ஜானவி வரவேற்றார். மாணவ, மாணவிகள் அனைவரும் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தமிழ்நாடு சைகை கம்பெனி ஜூனியர் கமாண்டிங் ஆபீஸர் சுபேதார் சுரேந்திரபாண்டியன், ஹவில்தார் ரகுநந்தன், கல்லூரி டீன் பரமசிவன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர் கலையரசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தேசிய மாணவர் படை அதிகாரி மேஜர் பிரகாஷ் மற்றும் தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

The post கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: