நாசுவம்பாளையத்தில் அண்ணன்மார் சாமி கோவில் திருவிழா

 

பல்லடம், ஜூன் 1: பல்லடம் அருகே நாசுவம்பாளையத்தில் அண்ணன்மார்சாமி கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. பல்லடம் அருகே வடுகபாளையம்புதூர் ஊராட்சி நாசுவம்பாளையத்தில் உள்ள அண்ணன்மார்சாமி கோவிலில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. நேற்று முக்கிய நிகழ்ச்சியாக பன்றி குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட பன்றிகள், ஆடுகள் பலியிடப்பட்டன.

இது குறித்து கோவில் பூசாரிகள் கூறுகையில், ‘‘முந்தைய காலத்தில் விவசாயத்தை அழிப்பதற்காக எதிரி நாட்டு மன்னர்களால் பன்றி மற்றும் ஆடுகள் அனுப்பப்பட்டது. அவ்வாறு அனுப்பப்பட்ட பன்றிகள், ஆடுகளை கொன்று மக்கள் தங்களுக்குள் பங்கிட்டு சமைத்து உண்டனர். அதே முறையை கடைபிடித்து அண்ணன்மார் கோவில்களில் விழா எடுத்து பன்றி குத்தும் நிகழ்ச்சி நடத்தி அதன் இறைச்சியை பங்கிட்டு கொள்கின்றனர்’’ என்றார்.

The post நாசுவம்பாளையத்தில் அண்ணன்மார் சாமி கோவில் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: