திருப்பூர், டிச. 23: திருப்பூர் பகுதியில் பிரதான சாலையாக பல்லடம் சாலை உள்ளது. இந்த சாலையை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இதனால், எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் தென்னம்பாளையம் பகுதியில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் சாலையில் வாகனங்களை தாறுமாறாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிறுத்தி செல்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே போக்குவரத்து போலீசார் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
