திருப்பூர், டிச. 24: திருப்பூர் குமரன் சாலையில் உள்ள மாநாட்டு அரங்கில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி கமிஷனர் அமித் தலைமை தாங்கி பேசியதாவது: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிற நடவடிக்கைகளை சிறப்பாக செய்ய வேண்டும்.
மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரித்து பெறுவது தொடர்பாக விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வர வேண்டும். இதுபோல் பாலித்தீன் பைகள் பயன்பாட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார். இதில் மாநகராட்சி துணை கமிஷனா்கள் மகேஸ்வரி, சுந்தர்ராஜன் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.
