பெருமாநல்லூர் கே.எம்.சி.சட்டக்கல்லூரியில் ரத்த தான முகாம்

அவிநாசி,டிச.23: அவிநாசி அருகே பெருமாநல்லூரில், கே.எம்.சி. சட்டக் கல்லூரியின் ப்ரோ லோமோ சட்ட சேவை மையம் மற்றும் சட்டக்கல்லூரியின் என்.எஸ்.எஸ் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, பெருமாநல்லூர் கே.எம்.சி. சட்டக்கல்லூரி, பெருமாநல்லூர் ரோட்டரி சங்கம், பெருமாநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அரசு ரத்த வங்கியுடன் இணைந்து நடத்தப்பட்டது.

இதற்கு பெருமாநல்லூர் ரோட்டரி சங்கத்தலைவர் சசிகாந்த் தலைமை தாங்கினார். கே.எம்.சி. சட்டக்கல்லூரி தாளாளர் அருணா தேவி, கே.எம்.சி. சட்டக்கல்லூரி முதல்வர் சௌந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டராக்ட் பட்டையத்தலைவர் நிறுவல் மற்றும் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவுடன் நிகழ்ச்சி, தொடங்கியது. கே.எம்.சி. சட்டக்கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தையும் நிறுவலையும் குறிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது. விழாவில் மாவட்ட ஆளுநர் தனசேகரன் தலைமை விருந்தினராகவும், மாவட்டம் 3203-ன் முதல் ரோட்டரி பெண்மணி அமுதா பிரியா சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் 55 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு, அவசர மற்றும் கடுமையான மருத்துவ தேவைகளுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: