புகையிலை எதிர்ப்பு வாசகம் இல்லாத கடைகளுக்கு அபராதம்

களக்காடு, ஜூன் 1: களக்காடு நகராட்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஜெயச்சந்திரன் முன்னிலையில் புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதனைதொடர்ந்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதில் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் கணபதிராமன், சிவராமன், கண்ணன், களக்காடு நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் சண்முகம், வேலு கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. அப்போது 5 கடைகளுக்கு, புகையிலை எதிர்ப்பு குறித்த வாசகம் இல்லாததால் ரூ.1,500ம், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதற்கு ரூ.1000ம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post புகையிலை எதிர்ப்பு வாசகம் இல்லாத கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: