இஎஸ்ஐ இணையதளத்தில் தொழிலாளர்களின் யு.ஏ.என் பதிவு செய்ய வேண்டும்: மண்டல இயக்குனர் அறிக்கை

சென்னை: தொழிலாளர் காப்பீடு கழகத்தின் சென்னை மண்டல அலுவலக கூடுதல் ஆணையர்/ மண்டல இயக்குனர் ஆர்.குணசேகரன் விடுத்துள்ள அறிக்கை: சென்னை இ.எஸ்.ஐ.சி மண்டலத்தின் கீழ் வரும் அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரியும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தால் வழங்கப்பட்ட யு.ஏ.என் (யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர்) என்ற 12 இலக்க எண்ணை கேட்டு பெற்று, அதை இ.எஸ்.ஐ. கழகத்தின் அலுவலக இணையதளமான wwww.es.ic.in என்ற தளத்தில் சென்று, தங்களுக்கென ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயன்பாட்டாளர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு உள் நுழைந்து அனைத்து தொழிலாளர்களின் யு.ஏ.என் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும், தங்களின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் யு.ஏ.என் விவரங்களை ஒரே நேரத்தில் எக்ஸெல் மூலம் மொத்தமாக பதிவேற்றம் செய்ய வசதி உள்ளது. அனைத்து நிறுவனங்களும் இந்த பதிவேற்றத்தை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு இ.எஸ்.ஐ.சி அலுவலகத்தின் (rd-tamilnadu@esic.nic.in) என்ற மின்னஞ்சலிலும், 044-28306316/ 15 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post இஎஸ்ஐ இணையதளத்தில் தொழிலாளர்களின் யு.ஏ.என் பதிவு செய்ய வேண்டும்: மண்டல இயக்குனர் அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: