பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; கார்சியாவை வீழ்த்தினார் கெனின்: 3வது சுற்றில் சிட்சிபாஸ்


பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 3வது சுற்றுக்கு முன்னேறினார். வது சுற்றில் உள்ளூர் நட்சத்திரம் கரோலின் கார்சியாவுடன் (30 வயது, 23வது ரேங்க்) நேற்று மோதிய சோபியா கெனின் (25 வயது, 56வது ரேங்க்) 6-3, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 25 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 2வது சுற்றில் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜெபர் (29 வயது, 9வது ரேங்க்) 6-3, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் கொலம்பியாவின் கமிலா ஒசாரியோவை (22 வயது, 77வது ரேங்க்) வீழ்த்தினார்.

இப்போட்டி 1 மணி, 45 நிமிடத்துக்கு நீடித்தது. ண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நேற்று களமிறங்கிய கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் (25 வயது, 9வது ரேங்க்), ஜெர்மனியின் டேனியல் ஆல்ட்மையருக்கு (25 வயது, 83வது ரேங்க்) எதிராக 6-3, 6-2 என முதல் 2 செட்களையும் கைப்பற்றி முன்னிலை பெற்றார். 3வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த ஆல்ட்மையர் டை பிரேக்கரில் 7-6 (7-2) என வெற்றியை வசப்படுத்த போட்டி விறுவிறுப்பானது. எனினும், 4வது செட்டில் ஆல்ட்மையரின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த சிட்சிபாஸ் 6-3, 6-2, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் 2 மணி, 43 நிமிடம் போராடி வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் (21 வயது, 3வது ரேங்க்) தனது 2வது சுற்றில் 6-3, 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங்கை (23 வயது, 176வது ரேங்க்) வீழ்த்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 9 நிமிடத்துக்கு நீடித்தது.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்; கார்சியாவை வீழ்த்தினார் கெனின்: 3வது சுற்றில் சிட்சிபாஸ் appeared first on Dinakaran.

Related Stories: