மண்டபம் ரயில், பஸ் நிலையங்களில் வெளியூர் வேன்களில் ஆட்கள் ஏற்றுவதை தடுக்க வேண்டும்: ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்டிஓவிடம் மனு

 

ராமநாதபுரம், மே 28: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திலுள்ள மக்கள் குறைதீர்க்கும் முகாம் புகார் பெட்டியில் நேற்று மண்டபம் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஒரு மனுவினை போட்டனர். பின்னர் ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் மனு அளித்தனர். அப்போது ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க தலைவர் செல்வம், செயலாளர் கணேஷ்பாபு கூறியதாவது: மண்டபம் பஸ் நிலையத்தில் 40 ஆட்டோக்கள், ரயில் நிலையத்தில் 60 ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பஸ் மற்றும் ரயில் பயணிகள், உள்ளூர், வெளியூர் மக்களை நம்பி ஆட்டோக்களை இயக்கி வருகிறோம்.

இந்நிலையில் வெளியூர் பர்மிட் வேன்கள் மற்றும் வெளியூர் பர்மிட் ஆட்டோக்களில் சிலர் மண்டபம் பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் வந்து கூவி, கூவி ஆட்களை ஏற்றி டிக்கட் போட்டு ஏற்றி செல்கின்றனர். இதனால் உள்ளூர் பகுதி ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே வெளியூர் பர்மிட் வேன்கள் மற்றும் ஆட்டோக்களில் ஆட்களை டிக்கட் போட்டு ஏற்றுவதை தடுத்து நிறுத்த கலெக்டர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

The post மண்டபம் ரயில், பஸ் நிலையங்களில் வெளியூர் வேன்களில் ஆட்கள் ஏற்றுவதை தடுக்க வேண்டும்: ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்டிஓவிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: