கோயில் பூசாரிக்கு எதிரான பாலியல் புகார் விவகாரம் சிபிசிஐடி விசாரணை கோரி பாதிக்கப்பட்ட பெண் வழக்கு

சென்னை: கோயில் பூசாரிக்கு எதிராக அளித்த பாலியல் பலாத்கார புகாரின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி புகாரளித்த பெண் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி. இவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சாலிகிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக் முனுசாமிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தலைமறைவாக உள்ள கார்த்திக் முனுசாமியை கண்டுபிடிக்க போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர். இந்த நிலையில், தனக்கு முன் ஜாமீன் கோரி கார்த்திக் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடக்கோரி புகார் அளித்த பெண் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், புகார் அளித்ததற்காக கார்த்திக் தனக்கு மிரட்டல் விடுத்துவருகிறார். புகாரின் அடிப்படையில் கார்த்திக்கை இன்னும் காவல்துறை கைது செய்யவோ, அவரிடம் விசாரணை நடத்தவோ இல்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

The post கோயில் பூசாரிக்கு எதிரான பாலியல் புகார் விவகாரம் சிபிசிஐடி விசாரணை கோரி பாதிக்கப்பட்ட பெண் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: