மாணவர்களுக்கு பாராட்டு விழா

 

மதுரை, மே 27: மதுரை ஒத்தக்கடையில், மரம் நடும் விழா மற்றும் ஒத்தக்கடை அரசு பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆலோசகர்கள் ராகேஷ், பிரபு, மாணவி பூஜா, சமூக ஆர்வலர் ஷர்மிளா தேவி பவுன்ராஜ் கலந்து கொண்டு பேசினர். நிகழ்வில் ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி ஜெகஸ்ரீமா, 10ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவி ஆஷிபா,

பாத்திமா ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர் முருக பூபதி, 10ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர் மணிகண்டன் ஆகியோருக்கு பதக்கம் மற்றும் ஷீல்டுகள் வழங்கப்பட்டது. வாதானி, புங்கை, செர்ரி மரக்கன்றுகளை இயற்கை பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன், இயற்கை ஆர்வலர் மலர்மங்கை வழங்கினர்.

The post மாணவர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: