மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெறிச்சோடிய மீன் மார்க்கெட்

 

கரூர், மே 27: கரூர் மாரியம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு அன்சாரி தெருவில் இயங்கி வரும் மீன் மார்க்கெட் வளாகம் நேற்று மக்கள் வரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கரூர் மாநகராட்சியில் அன்சாரி தெருவில் மீன் மார்க்கெட் வளாகம் செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில், கடல் மீன்கள், டேம் மீன்கள் போன்றவை அதிகளவு இங்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விதவிசதமான கடல் மீன்கள் இந்த மார்க்கெட்டில் விற்பனை செய்து வருதால் பொதுமக்கள் வாரந்தோறும மார்க்கெட் சென்று தேவையான மீன்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மே 12ம்தேதி முதல் 29ம்தேதி வரை பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவின் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து கோயிலுக்கு சென்று வருகின்றனர். இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நாட்களில் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும் மீன் மார்க்கெட் வளாகம் மக்கள் வரத்தின்னறி வெறிச்சோடியே காணப்பட்டது. மேலும், வரும் 29ம்தேதி கம்பம் ஆற்றில் விடும் நிகழ்வன்றும், அதற்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் மக்கள் மீன் வாங்க அ திகளவு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வெறிச்சோடிய மீன் மார்க்கெட் appeared first on Dinakaran.

Related Stories: