குழந்தை திருமணம் செய்து வைத்தால் பெற்றோர் மட்டுமின்றி உடந்தையாக இருந்த அனைவருக்கும் அபராதம், தண்டனை: விழிப்புணர்வு முகாமில் எச்சரிக்கை

பெரம்பலூர்: குழந்தை திருமணம் செய்து வைத்தால் அவர் களது பெற்றோருக்கு மட்டு மன்றி உடந்தையாக இருந்த அனைவருக்கும் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும் என பெரம்பலூ ரில் அரசு உதவியுடன் தொழிற் பயிற்சி பயின்று வரும் மாணவ மாணவிகளிடையே பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு எஸ்எஸ்ஐ மருதமுத்து மற்றும் ஒன் ஸ்டெப் சென்டர் ரேகா ஆகியோர் இணைந்து நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பிற்காக அரசு உதவியுடன் தொழிற் பயிற்சி பயின்று வரும் மாணவ மாணவிகளி டையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் எஸ்எஸ்ஐ மருதமுத்து பேசுகையில்,ஆண்களுக்கு 21 வயது, பெண்களுக்கு 18 வயது ஆன பிறகுதான் திருமணம் நடத்தி வைக்க வேண்டும்.அதற்குமுன்பாக திருமணம் நடைபெற்றால் அது குழந்தை திருமணம் எனப்படும். குழந்தை திரும ணம் செய்து வைத்தால் அவர்களது பெற்றோருக்கு மட்டுமன்றி உடந்தையாக இருந்த அனைவருக்கும் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படும்.
மேலும் குழந்தை களை பாலியல் துன்புறுத் தலில் ஈடுபடுத்தும் நபர்க ளுக்கு தண்டனை பெற்றுத் தர போக்சோ சட்டம் உள்ளது. சிறுமிகளுக்கு யாரேனும் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் பெறப் பட்டால், போக்சோ சட்டத் தின்கீழ் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவமாணவியர் அனை வரும் அரசு நலத் திட்ட உத விகளை பயன்படுத்தி உயர் கல்வி வரை கட்டாயம் படிக்க வேண்டும். பள்ளி யில் இடைநிற்றலைத் தவிர்க்க பல்வேறு நடவடிக் கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. பள்ளிப் படிப்பை மேற்கொள்ளாமல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர் களை வேலைக்கு அமர்த்து வது, குழந்தைதொழிலாளர் தடை சட்டத்தின் கீழ் தண் டிக்கப்பட வேண்டிய குற்ற மாகும். ஒவ்வொரு குடும் பத்திலும் பெண்கள் கட்டா யம் உயர் கல்வி பயில வேண்டும்.

அரசுப் பள்ளிக ளில் படித்து உயர் கல்வி பெறுவோருக்கு தமிழக அரசின் சார்பாக மாதாந்திர உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பம் மட்டுமன்றி அவரைச் சார்ந்த உறவினர் கள், அவர்வாழும் கிராமம் அனைத்தும் பயன் பெறும். உங்கள் சுற்றுவட்டார பகுதி களில் பள்ளிக்குச் செல்லா மல் கடைகளிலோ வயல் களுக்கோ கூலிவேலைக்கு சிறுவர்களை அழைத்துச் சென்றால் உடனடியாக பள்ளிக்கல்வித் துறைக் கோ அல்லது காவல் துறைக்கோ தகவல் தர வேண்டும்

பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது அவசி யமாகும் பெண்கள் மாண விகள் தங்களுக்கான பாது காப்பை உறுதி செய்து கொள்ள காவல்துறையில் செயல்பட்டு வரும் காவலன் (KAVALAN SOS APP) செயலி எனப்படும் காவலன் ஆப்பினை தங்க ளது செல்போன்களில் டவுன்லோட் செய்து வைத் துக் கொள்ள வேண்டும். தங்களுக்கு ஏதேனும் பிரச்னைகள், பாதிப்புகள் ஏற் பட்டால் இந்த காவலன் ஆப் மூலம் புகாரினைப் பதிவு செய்து தீர்வு காண லாம்

அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்தி லும் செயல்படும் காவல் உதவி எண்களான பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181, Women Help Desk 112,குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரி விக்க 1098, பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417, முதியோர் உதவி எண்கள் 14567, சைபர் கிரைம் உதவி எண் கள் 1930 ஆகியவற்றைக் குறித்து வைத்துக் கொண்டு தேவைப்படும் நேரங்களில் புகார் அளித்து தீர்வுகாணலாம்.

ஒவ்வொரு மாணவிகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தங்களது பெற்றோர்களிடம் அச்சமின்றி தெரிவித்து அதற்கான தீர்வினைப் பெறவேண்டும் எனத் தெரிவித்தார். மேலும் மாணவிகள் ஒவ்வொருவ ருக்கும் தொடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post குழந்தை திருமணம் செய்து வைத்தால் பெற்றோர் மட்டுமின்றி உடந்தையாக இருந்த அனைவருக்கும் அபராதம், தண்டனை: விழிப்புணர்வு முகாமில் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: