ரீமேல் புயல் எதிரொலி; வேதாரண்யத்தில் 100 அடி கடல்நீர் உள்வாங்கியது:பொதுமக்கள் அச்சம்

வேதாரண்யம்: வேதாரண்யம் கடற்கரை பகுதி நேற்று மாலை சுமார் 100 மீட்டர் கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வங்க கடல் பகுதியில் உருவாகி உள்ள ரீமேல் புயல் காரணமாக கடலில் பலத்த காற்ற வீசகூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று 8வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீன் பிடிக்க செல்லாததால் மீனவர்கள் வீடுகளில் முடங்கி போய் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஆறுகாட்டு துறையில் இருந்து வேதாரண்யம் சன்னதி கடல், மணியன்தீவு வரை சுமார் 100 அடி கடல்நீர் உள்வாங்கியது. வழக்கமாக கடல் உள்வாங்குவதும் பின்பு வெளி வருவதும் தொடர்ந்து நடைபெற்றாலும் தற்போது அதிக தூரம் கடல் நீர் உள்வாங்கி இருப்பது கடலில் ஏற்பட்டுள்ள ரீமேல்புயல் காரணமாக இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். வழக்கமாக மாலை நேரங்களில் வேதாரண்யம் சன்னதி கடலில் பொதுமக்கள் மற்றும் நடைபெற்று மேற்கொள்ளவர்கள் கடல் உள்வாங்கியதும் அவசர அவசரமாக வீடு திரும்பினர்.

The post ரீமேல் புயல் எதிரொலி; வேதாரண்யத்தில் 100 அடி கடல்நீர் உள்வாங்கியது:பொதுமக்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: