பனங்குடி முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா

நாகப்பட்டினம்,மே 26: திருமருகல் அருகே பனங்குடி முத்துமாரியம்மன்கோயில் வைகாசி திருவிழா நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அருகே பிள்ளை பனங்குடியில் முத்து மாரியம்மன், மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இதன்படி இந்த ஆண்டு வைகாசி விசாக விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகமும், சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது. பின்னர் முத்து மாரியம்மன், மகா காளியம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

The post பனங்குடி முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: