சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் 103 மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்

சிவகங்கை, மே 26: சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் 7வது பட்டமளிப்பு விழாவில் மாணவ,மாணவிகள் 103 பேர் இளநிலை மருத்துவர் பட்டம் பெற்றனர். முதல்வர் சத்தியபாமா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் ஆஷா அஜித் சிறப்புரை ஆற்றி 43 மாணவர்கள், 60 மாணவிகளுக்கு இளநிலை மருத்துவருக்கான பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். இதில் மருந்தியலில் 3 பேரும், குழந்தைகள் மருத்துவப்பாடத்தில் ஒரு மாணவரும் தங்கப்பதக்கம் பெற்றனர். டாக்டர் கெளரி நினைவு ரொக்கப்பரிசை ஒரு மாணவர் பெற்றார். கல்லூரி அளவில் அனைத்து பாடங்களிலும் 16 பேர் சிறப்பிடம் பிடித்தனர்.

விழாவில் துணை முதல்வர் விசாலாட்சி, மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் குமாரவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிலைய மருத்துவ அதிகாரி மகேந்திரன், உதவி நிலை மருத்துவ அதிகாரிகள் முகமது ரபி, தென்றல், மாணவ,மாணவிகளின் பெற்றோர் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். விழாவினை மருத்துவர்கள் ஷர்மிளா திலகவதி, சரவணகுமார், அருண்குமார் யோகராஜ், சேதுபதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

The post சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் 103 மாணவர்களுக்கு பட்டம் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: