கட்டுமான தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய 7 சிறுவர்கள் கைது

மதுரை, மே 25: மதுரை, சுப்ரமணியபுரத்தை சேர்ந்தவர் அஜய் (28). கட்டுமான தொழிலாளியான இவர், சில தினங்களுக்கு முன் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது, டூவீலரில் வந்த எம்.கே.புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர், அஜய் மீது மோதுவது போல் சென்று வாகனத்தை நிறுத்தியபின் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால், இருதரப்புக்கும் இடையே கைகலப்பாகி ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அஜய்யும், அவரின் அண்ணன் விஜய்யும் டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தனர்.அங்கு, ஏற்கனவே அஜய்யுடன் தகராறு செய்த சிறுவர்கள் இருவரும், அவர்களின் நண்பர்கள் ஐந்து பேருடன் நின்றிருந்தனர். அவர்கள் மீண்டும் அஜய் மற்றும் அவரது அண்ணனுடன் தகராறு செய்தனர். அப்போது இருவரையும் சரமாரியாக தாக்கியதுடன் அஜய்யை வாளால் வெட்டியுள்ளனர். இதுகுறித்து, ஜெய்ஹிந்த்புரம் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, சிறுவர்கள் ஏழு பேரையும் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

The post கட்டுமான தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய 7 சிறுவர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: