இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் 3 நாட்களுக்குள் பிரதமர் யார் என அறிவிக்கப்படும்: காங்கிரஸ் உறுதி

சண்டிகர்: இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் மூன்று நாட்களுக்குள் பிரதமர் யார் என அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சண்டிகரில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘ஜூன் 4ம் தேதி இந்தியா கூட்டணி ஒரு தெளிவான மற்றும் தீர்க்கமான மக்களின் ஆணையை பெற போகிறது. கடந்த 2004ம் ஆண்டை போலவே 20 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு மீண்டும் நிகழப்போகிறது. 2004ம் ஆண்டு பொது தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது என்று பிரசாரம் செய்த போதிலும் பாஜ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டது.

அப்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமர் என்று கேள்வி எழுப்பி வருபவர்களுக்கு நான் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்.
2004ம் ஆண்டு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி வெற்றி பெற்ற பின் மூன்று நாட்களில் பிரதமர் மன்மோகன் சிங் பெயர் அறிவிக்கப்பட்டது. ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் 3 நாட்களுக்குள் பிரதமர் யார் என அறிவிக்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரே ஒருவர் தான் பிரதமராக இருந்து அரசை நடத்துவார்” என்றார்.

The post இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் 3 நாட்களுக்குள் பிரதமர் யார் என அறிவிக்கப்படும்: காங்கிரஸ் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: