மானூரில் விநாயகா ஸ்கேன்ஸ்-லேப்ஸ் திறப்புவிழா

மானூர், மே 24: மானூரில் விநாயகா ஸ்கேன்ஸ் மற்றும் லேப்ஸ் திறப்பு விழா நடந்தது.மானூர் பஜாரில் எஸ்பிஐ வங்கியின் பின்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக விநாயகா ஸ்கேன்ஸ் மற்றும் லேப்ஸ் செயல்பட்டு வந்தன. தற்போது மானூர் மெயின்ரோட்டில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்புவிழா நடந்தது. இதனை உரிமையாளர் கரம்பை ராஜ்குமார் வரவேற்றார். அவரது மகன் சுடலை மகாராஜன் திறந்து வைத்தார். இயக்குநர்
தர்சினி பேசும்போது, இங்கு கர்ப்பிணிகளுக்கான அனைத்து வகை ஸ்கேன், இதயம், நரம்பு, மார்பகம், கல்லடைப்பு, ரேடியோலேஜ், அல்ட்ரா சவுண்ட், ரத்த பரிசோதனை போன்ற மனித உடலின் முழு பரிசோதனைக்குரிய ஸ்கேன் வசதிகள் உள்ளது என்றார். இங்கு ரேடியோலிஸ்ட், கார்டியோலிஸ்ட் சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டனர்.

 

The post மானூரில் விநாயகா ஸ்கேன்ஸ்-லேப்ஸ் திறப்புவிழா appeared first on Dinakaran.

Related Stories: