சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு

துபாய்: சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியா நாட்டு மன்னராக கடந்த 2015ம் ஆண்டு பொறுப்பேற்றவர் சல்மான்(88). வயதாகி விட்டதால் தனது மகன் முகமது பின் சல்மானை பட்டத்து இளவரசராக மன்னர் நியமித்துள்ளார். மன்னர் சல்மானுக்கு கடந்த மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஜெட்டா அல்சலாம் அரண்மனையில் உள்ள ராயல் கிளினிக்கில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், மன்னருக்கு நுரையீரல் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது சவுதி அரசு ஊடகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

The post சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: