ஓமலூர், மே 20: ஓமலூர் உட்கோட்ட காவல் சரகத்தில் சட்டவிரோதமாக, சந்துகடைகள் மற்றும் தாபா ஓட்டல்களில் மது விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து ஓமலூர், தீவட்டிப்பட்டி, தாரமங்கலம், தொளசம்பட்டி ஆகிய காவல் நிலைய பகுதிகளில், போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். தொளசம்பட்டி எஸ்ஐ அமிர்தலிங்கம் தலைமையில் சோதனை நடத்தியதில், எம்.செட்டிப்பட்டி கோவிந்தன், தொளசம்பட்டி பெருமாள் ஆகியோரை கைது செய்து, 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல தீவட்டிப்பட்டியில் பண்ணப்பட்டியை சேர்ந்த வெண்ணிலா, சிவாஜி, ஓமலூரை சேர்ந்த குணசேகரன், கன்னங்குறிச்சியை சேர்ந்த தேவா ஆகியோரை கைது செய்தனர். ஓமலூர் காவல் நிலையத்தில் கருத்தானூர் ஈஸ்வரன், காமலாபுரம் அருள், தாபா மாதையன், ஓமலூர் பைபாஸ் சோனா தாபா தங்கராஜ், தொளூர் சுந்தரவடிவேல் உட்பட மொத்தம் 11 பேரை கைது செய்து 100க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
The post ஓமலூர் உட்கோட்டத்தில் மது விற்ற 11 பேர் கைது appeared first on Dinakaran.