திருச்செங்கோடு, மே 20: திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை திடீர் மழை பெய்தது. இதனால் சங்ககிரி, சேலம், தெப்பக்குள் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பிஎஸ்என்எல் அலுவவலகம் மற்றும் எம்எல்ஏ அலுவலகம் முன் மழைநீர் தேங்கி நின்றது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. மழைக்கு பின் குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post தி.கோடு நகரில் பலத்த மழை appeared first on Dinakaran.