குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை

கிருஷ்ணகிரி, மே 20: கிருஷ்ணகிரி அடுத்துள்ள பெத்ததாளப்பள்ளி பஞ்சாயத்து. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்திற்குட்பட்ட ஆனந்த நகரை ஒட்டி, கலால் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பல பகுதிகளில் சாக்கடை கால்வாய் இல்லை. சாலை வசதிகளும் இல்லை. இங்குள்ள பல பகுதிகளில் சாக்கடை நீர் தேங்கி கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் குடி வந்தோம். அப்போது அதிகளவில் வீடுகள் இல்லை. ஆனால் தற்போது, நூற்றுக்கணக்கான வீடுகள் வந்தபோதும் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. கழிவுநீர் தேங்கி வீடுகள் அருகிலேயே குட்டை போல் தேங்கியுள்ளது. தற்போது பெய்யும் மழை நீரும் சேர்ந்து, துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று அபாயமும் உள்ளது. குடிநீருக்கு போர் அமைத்து பைப்லைன் செல்கிறது. ஆனால் எங்களுக்கு குடிநீர் இணைப்பும் வழங்கவில்லை. கோரிக்கைகளில் ஒன்றை கூட பஞ்சாயத்து நிர்வாகம் செய்து தரவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

 

The post குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை appeared first on Dinakaran.

Related Stories: