டயர் வெடித்ததால் சென்டர் மீடியனில் மோதிய தனியார் பஸ்

துவரங்குறிச்சி, மே 19: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த சுமார் 50 பக்தர்கள் ஒரு சுற்றுலா பேருந்தில் சபரிமலைக்கு சென்று விட்டு மீண்டும் நேற்று காலை அவர்களது சொந்த ஊரான கறம்பக்குடிக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பேருந்தை கறம்பக்குடியை சேர்ந்த மகன் பழனிவேல் (37) என்பவர் ஓட்டினார். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கல்பட்டி அருகே பேருந்து வந்தபோது, முன் பக்க டயர் திடீரென வெடித்ததில் தாறுமாறாக ஓடிய பேருந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சுமார் 10 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போலோ மருத்துவமனை சார்பில்

The post டயர் வெடித்ததால் சென்டர் மீடியனில் மோதிய தனியார் பஸ் appeared first on Dinakaran.

Related Stories: