நான் முதல்வன் திட்டத்தில் 24,468 பேர் பயன் கோடை குறுவை சாகுபடி வயல்களில் நெல்மணிகள் முதிர்ந்து அறுவடைக்கு தயார்

தோகைமலை, மே 17: தோகைமலை ஒன்றியங்களில் நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைப்பட்டி மற்றும் குளித்தலை பகுதிகள், நங்கவரம், நச்சலூர், குறிச்சி, சூhpயனூர் போன்ற பகுதிகளில் ஆற்றுப் பாசனமாகவும், கள்ளை, தளிஞ்சி, தோகைமலை, நாகனூர், கழுகூர், ஆர்ச்சம்பட்டி, ஆர்டிமலை, புழுதோp, வடசேரி, ஆலத்தூர், பாதிhpபட்டி உட்பட 17 ஊராட்சிகள் கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப் பாசன பகுதிகளாகவும் இருந்து வருகிறது. இதேபோல் கடவூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள 20 ஊராட்சிகளும் ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் குளத்துப் பாசன பகுதிகளாகவும் உள்ளது.

ஆண்டுகள் தோறும் பருவ மழை முறைப்படி பெய்து வந்தால் மேற்கண்ட பகுதிகளில்; விவசாய பணிகளில் எப்போதும் பரபரப்பாக காணப்படுவார்கள். கடந்த ஆண்டு பருவமழை குறைவால் காவிhpயில் நீர்வரத்து குறைந்தது. இதனால் காவிhp ஆற்றிலிருந்து கரூர் கட்டளை மேட்டுவாய்க்கால் பகுதியில் இருந்து வரும் காவிhpநீர் நிறுத்தப்பட்டது. இதனால் வாய்க்கால் பகுதியை ஒட்டியுள்ள பாசனப் பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு உள்ள விவசாயிகள் மட்டும் சம்பா சாகுபடியை செய்தனர். இதேபோல் கடவூர் பகுதிகளிலும் போதிய மழை இல்லாமல் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தால் கிணற்று பாசங்கள், குளத்து பாசனங்கள் அனைத்தும் முற்றிலும் அழிந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை கணிசமான அளவில் பெய்தது. இதனை அடுத்து கிணற்றுப்பாசன விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து அறுவடை செய்தனர். தற்போது கிணறுகளில் தண்ணீர் இருப்பதால் சம்பா அறுவடை முடிந்த பின்பு குறுவை (கோடை) சாகுபடியை கடந்த மாதம் தொடங்கினர். இதில் அட்ய பொன்னி, கோ 51, எஎஸ்பி 16, ஆடுதுரை 36 போன்ற ரகங்களை விவசாயிகள் தேர்வு செய்து நடவு பணிகளை தொடங்கி உள்ளனர்.

கோடை நெல் (குறுவை) மணிகள் 105 நாட்களில் இருந்து 110 நாளில் மகசூல் பெறும் மேற்படி ரக விதை நெல், 30 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.1150 முதல் ரூ.1300 வரை தனியார் கடைகளில் பெற்று வதைத்து உள்ளனர். ஒரு ஏக்கருக்கு 45 கிலோ வரை விதை நெல் தேவைப்படுவதாகவும் கூறுகின்றனர். தற்போது தோகைமலை மற்றும் கடவூர் ஒன்றிய பகுதிகளில் (கோடை) குறுவை சாகுபடி செய்த வயல்களில் நெற்பயிரில் நெல்மணிகள் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயார்நிலையில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

The post நான் முதல்வன் திட்டத்தில் 24,468 பேர் பயன் கோடை குறுவை சாகுபடி வயல்களில் நெல்மணிகள் முதிர்ந்து அறுவடைக்கு தயார் appeared first on Dinakaran.

Related Stories: