புடின்-ஜீ ஜின்பிங் சந்திப்பு: ரஷ்ய- சீன உறவை வலுப்படுத்த திட்டம்

பெய்ஜிங்: சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு அதிபரை ஜீ ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் ஐந்தாவது முறையாக மீண்டும் அதிபராகியுள்ளார். இதனை தொடர்ந்து முதல் வெளிநாட்டு பயணமாக அவர் சீன சென்றுள்ளார்.இரண்டு நாள் பயணமாக அதிபர் நேற்று சீனா வந்தடைந்தார்.

ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார இடமான வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் மண்டபத்திற்குள் அதிபர் புடினுக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரு நாட்டு அதிபர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். இந்த பேச்சில் இரு தரப்பையும் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

அப்போது, இருநாடுகளுக்கு இடையே வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அதிபர் புடினுடன், 5 துணை பிரதமர்கள், பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களின் தலைவர்கள் அடங்கிய மிகப்பெரிய குழுவினரும் சீனா சென்றுள்ளனர். 20 ரஷ்ய பிராந்தியங்களை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் சீனா வந்துள்ளனர். கடந்த ஓராண்டில் புடின் சீனா செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

The post புடின்-ஜீ ஜின்பிங் சந்திப்பு: ரஷ்ய- சீன உறவை வலுப்படுத்த திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: