ராணுவத்தில் இரண்டு விதமான வீரர்கள் என விமர்சனம் ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜ புகார்

புதுடெல்லி: ராணுவத்தில் 2 விதமான வீரர்கள் உள்ளனர் என்று கருத்து தெரிவித்ததாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஒன்றிய அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் ரேபரேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி பாஜ அரசின் அக்னிபாத் திட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ராணுவத்தில் ஏழைகள், பட்டியல் வகுப்பினர் உள்ளிட்டோர் ஒரு பிரிவினர் என்றும் வசதி படைத்தவர்கள் இன்னொரு பிரிவினர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்தில் ஒன்றிய அமைச்சர்கள் ஜெய்சங்கர், அர்ஜூன் ராம் மெக்வால், ராஜிவ் சந்திரசேகர் ஆகியோர் புகார் அளித்தனர். அமைச்சர் ஜெய்சங்கர்,‘‘ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் பொய்யாகும். இது ராணுவத்துக்கு எதிரான தாக்குதல். இதை சர்ச்சைக்குரியதாக ஆக்கி வீரர்களின் மனு உறுதியை நிலைகுலை செய்வதாகும். இது தேர்தலில் விவாதிக்கப்படக்கூடிய பிரச்னை அல்ல. இது தேச பாதுகாப்பு சம்மந்தப்பட்டது. பாதுகாப்பு சம்மந்தமான விஷயங்களை பேசியதற்காக அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்’’ என்றார்.

The post ராணுவத்தில் இரண்டு விதமான வீரர்கள் என விமர்சனம் ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜ புகார் appeared first on Dinakaran.

Related Stories: