நட்சத்திரங்களின் வெற்றி, தோல்வி

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் போட்டியிட்ட நடிகர், நடிகைகளில் சிலர் வெற்றியும், சிலர் தோல்வியும் பெற்றுள்ளனர். 2024 மக்களவை தேர்தலில் பாஜ சார்பில் உத்தரபிரதேசம் மதுரா தொகுதியில் பழம்பெரும் நடிகை ஹேமமாலினி போட்டியிட்டார். அவரை எதிர்த்து முகேஷ் தன்கர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்நிலையில் நடிகை ஹேமமாலினி 2,93,407 வாக்குகள் வித்தியாசத்தில் 5,10,064 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இமாச்சலபிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் நடிகை கங்கனா ரணாவத் 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் 5,37,022 வாக்குகளுடன் வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்கிரமாதித்ய சிங் 4,62,267 வாக்குகளுடன் தோல்வி அடைந்தார். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் நடிகை நவ்னீத் ராணா 5,06,540 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

அவரை எதிர்த்து களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளர் 19,731 வாக்குகள் வித்தியாசத்தில் 5,26,271 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.  ராமாயணம் தொடரில் ராமனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் அருண் கோவில் உத்தரபிரதேசத்தின் மீரட் தொகுதியில் பாஜ சார்பில் களமிறங்கினார். அவரை எதிர்த்து சமாஜ்வாடி வேட்பாளர் சுனிதா வர்மா போட்டியிட்டார்.

இந்நிலையில் நடிகர் அருண் கோவில் 10,585 வாக்குகள் வித்தியாசத்தில் 5,46,469 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆந்திரா மாநிலம் நகரி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ரோஜா 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இதேபோல் இந்துபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் நடிகர் பாலகிருஷ்ணா 1,07,250 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

The post நட்சத்திரங்களின் வெற்றி, தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: