எம்பி ஆனார் கங்கனா ஸ்மிருதி இரானி இடத்தை பிடிப்பாரா?

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாஜ கட்சி சார்பில் இமாச்சலின் மண்டி தொகுதியில் போட்டியிட்டார். இவர் 5,32,022 வாக்குகள் பெற்று 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங்கின் மகன் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை வென்றார். இதன் மூலம் நடிகை கங்கனா எம்பியாகி உள்ளார். இதே போல ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஹர்மிபூர் தொகுதியில் 1,82,357 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரசின் சத்பால் ரெய்சடாவை வீழ்த்தினார்.

இமாச்சல் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் நிலையில், அங்குள்ள 4 மக்களவை தொகுதிகளையும் பாஜ கைப்பற்றி உள்ளது. ஒன்றிய அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த ஸ்மிருதி இரானி இந்த முறை தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளார். பாஜவிலும், ஒன்றிய அமைச்சரவையிலும் ஸ்மிருதி இரானிக்கு முக்கியமான இடம் உண்டு. அந்த இடம் இப்போது ஒற்றிடமாக மாறி உள்ளது. இதனால், ஸ்மிருதி இரானியின் இடத்தை கங்கனா பிடிப்பாரா? என்ற எதிர்ப்பார்ப்பு பாஜவினரிடையே ஏற்பட்டுள்ளது.

The post எம்பி ஆனார் கங்கனா ஸ்மிருதி இரானி இடத்தை பிடிப்பாரா? appeared first on Dinakaran.

Related Stories: