சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் சந்தானம் வித்யாலயா சீனியர் செகன்டரி பள்ளி முதலிடம்

திருச்சி, மே15: சிபிஎஸ்இ -2024, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் திருச்சி சந்தானம் வித்யாலயா சீனியர் செகன்டரிப் பள்ளி மாணாக்கர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் பவானி GS சங்கர் 500க்கு 492 மதிப்பெண் பெற்று திருச்சி மாவட்டத்தில் முதல் இடம் பெற்றார்.

மாணவர் SK வெங்கடசுப்ரமணியம் மற்றும் மாணவி S.தீபிகா ஆகியோர் 487 மற்றும் 486 பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்தனர். கணிணி பாடத்தில் 4 மாணவர்களும், கணிதத்தில் ஒருவரும், உயிரியலில் ஒருவரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் செல்வி K.தேவதர்ஷினி 482/500 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். செல்வி J.பூர்ணாம்பிகா 474 , SR.பிரணவ்ராம் 464 மற்றும் SK.தோனி ஹாசன் 462 ஆகியோர் இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை முறையே பெற்றுள்ளனர். பத்ம தர் வேம்பு, தலைமை செயல் அதிகாரி ZOHO Corporation மாணவர்களுக்கு பரிசளித்து பாராட்டினார். தலைமை செயல் அதிகாரி K. சந்திரசேகரன், இயக்குனர் அபர்ணா சேகர், முதல்வர் பத்மா நிவாசன், டீன் கணேஷ், சந்தானம் அகாடமி தலைவர் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் பாராட்டினர்.

The post சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் சந்தானம் வித்யாலயா சீனியர் செகன்டரி பள்ளி முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: