விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அகிலேஷ் யாதவ் உறுதி

ஜாலோன்: இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், ஜாலோனில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளரை ஆதரித்து நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் பேசிய அகிலேஷ்,‘‘கடந்த பத்து ஆண்டுகளாக பாஜ ஆட்சியில் இருந்தும் மாநில மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அவர்களது எம்பிக்கள் இங்கு இருக்கிறார்கள். 7 ஆண்டுகளாக மாநிலத்தில் அவர்களது ஆட்சி நடக்கிறது. ஆனால் மக்களுக்காக அவர்கள் எந்த வளர்ச்சி திட்டங்களையும் செய்யவில்லை. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கடும் துன்பத்தில் இருக்கிறார்கள். அவர்களின் கடன்களை அரசு தள்ளுபடி செய்யவில்லை.

ஆனால் மிகப்பெரிய தொழிலதிபர்களின் கோடிக்கணக்கான கடன்களை அரசு தள்ளுபடி செய்கிறது. தங்களை ஏமாற்றியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் உறுதியாக உள்ளனர். இந்தியா கூட்டணி மற்றும் சமாஜ்வாடி ஆகிய நாங்கள் விவசாயிகளின் கடனை மட்டும் தள்ளுபடி செய்வதோடு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டரீதியாக உத்தரவாதம் வழங்குவோம்” என்றார்.

The post விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அகிலேஷ் யாதவ் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: