அடுத்து போரெல் – ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 92 ரன் சேர்த்தனர். ஹோப் 38 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), போரெல் 58 ரன் (33 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். கேப்டன் ரிஷப் பன்ட் – டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இணைந்து 4வது விக்கெட்டுக்கு அதிரடியில் இறங்க டெல்லி ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது.
பன்ட் 33 ரன் (23 பந்து, 5 பவுண்டரி) விளாசி நவீன் உல் ஹக் பந்துவீச்சில் ஹூடா வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட ஸ்டப்ஸ் 22 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. ஸ்டப்ஸ் 57 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), அக்சர் படேல் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
லக்னோ பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 2, ரவி பிஷ்னோய், அர்ஷத் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 209 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் களமிறங்கியது.
The post போரெல், ஸ்டப்ஸ் அதிரடி அரை சதம்; டெல்லி 208 ரன் குவிப்பு appeared first on Dinakaran.