பள்ளிகளில் டிஇஓ ஆய்வு பெரணமல்லூர் வட்டார

பெரணமல்லூர், மே 14: பெரணமல்லூர் வட்டாரத்தில் செயல்படும் அரசு நிதியுதவி பள்ளிகளில் செய்யாறு கல்வி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். தமிழக அரசின் சீரிய திட்டங்களில் ஒன்றான அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் மட்டும் செயல்பட்டு வரும் இத்திட்டத்தை வரும் கல்வியாண்டில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, அரசு நிதியுதவி பள்ளிகளில் அதற்கான கட்டமைப்புகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை பெரணமல்லூர் வட்டாரம் அரியபாடி, மோட்சவாடி, நெடுங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அரசு நிதியுதவி பள்ளிகளில் செய்யாறு கல்வி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜெயகாந்தம் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். குறிப்பாக இந்த பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்த வேண்டி பொருட்கள் வைப்பறை, சமையலறை, மாணவர்களுக்கு உணவு உண்ண த

The post பள்ளிகளில் டிஇஓ ஆய்வு பெரணமல்லூர் வட்டார appeared first on Dinakaran.

Related Stories: