போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 40 ஊராட்சிகள் 210 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்கூடுதல் கலெக்டர் துவக்கி வைத்தார்

போளூர், ஜூன் 16: போளூர் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளை சேர்ந்த 210 தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் போளூர் அரசு மகளிர் பள்ளியில் நடந்தது.முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நா.சக்திவேல் தலைமை தாங்கினார். கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் எ.எஸ்.லட்சுமி வரவேற்றார். முகாமை கூடுதல் கலெக்டர் செ.ஆ.ரிஷப் துவக்கி வைத்து பேசியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தூய்மை பணிகளில் ஈடுபடுவதால் எந்த நோய்களும் அவர்களை பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் ஒன்றியம் தோறும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். தெருக்களில் குப்பைகள் வாரும் போதும், வீடுகளில் வாங்கும் போதும் முகத்தில் பாதுகாப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். உடலில் பாதுகாப்பு தேவையாக உடைகள் அணிய வேண்டும். கைகளில் உரைகள் போட வேண்டும். பணிகள் முடிந்த உடன் கைகளை நன்கு கழுவ வேண்டும். உங்களை நீங்கள் பாதுகாப்பாக பார்த்து கொண்டால் தான் எந்த நோயும் உங்களை தீண்டாது. உங்களை சுற்றி உள்ளவர்கள் சுகதாரமாக வாழ முடியும் என பேசினார்.

அதனை தொடர்ந்து ஊராட்சிகளில் தூய்மை பணிசெய்யும் கிடைக்கும் பிளாஸ்டிக், கழிவு பொருட்களை தரம் பிரித்து அதனை விற்பனை செய்து அந்த தொகையினை காசோலையாக ஊக்க தொகையாக பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர்கள் வ.வேல்முருகன், ராம்பிரசாத், சித்த மருத்துவர் முல்லைகரசி, வட்டார சுகதார மேற்பார்வையாளர் தாமோதரன், ஆகியோர் கொண்ட குழுவினர்கள் பொது மருத்துவம், சித்த மருத்துவம், ரத்தம், சிறுநீர் பரிசோதனை, சர்க்கரை காசநோய்,புற்று நோய், தொழுநோய் அனைத்து நோய்களயைும் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஏ.பாலகிருஷ்ணன், பரமேஸ்வரி, மணிகண்டன், ஸ்ரீதர், கல்விக்கரசி, சமுதாய சுகாதார செவிலியர் ஷீலா, மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், கண் மருத்துவர், ஊராட்சி செயலாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post போளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 40 ஊராட்சிகள் 210 தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்கூடுதல் கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: