அங்கக சாகுபடியாளர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத்தில்

செய்யாறு, ஜூன் 16: செய்யாறு அருகே கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத்தில் அங்கக சாகுபடியாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத்தில் ஐதரபாத் வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிலையம், புது தில்லி வேளாண் திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையம் இணைந்து அங்கக சாகுபடியாளர்களுக்கான ஒரு மாத திறன் மேம்பாட்டுப்பயிற்சியின் துவக்க விழா வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் வே.சுரேஷ் தலைமை தாங்கி வரவேற்றார்.

தமிழ்நாடு கிராம வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் ச.இரமேஷ் அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்தும், திருவண்ணாமலை மாவட்ட விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (நபார்டு) மாவட்ட வளர்ச்சி மேலாளர் எம்.விஜய் நீஹர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் அங்கக வேளாண்மை செயல்பாடுகள் மற்றும் பல்வேறு தொழில் வாய்ப்புகள் குறித்தும், திருவண்ணாமலை மாவட்ட திறன் வளர்ப்பு பயிற்சி மையத்தின் உதவி இயக்குநர் வி.தியாகராஜன் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்தும், வெம்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்ககுநர் எம்.சண்முகம் அங்கக வேளாண்மையின் அவசியம், ரசாயன மருந்துகளால் ஏற்படும் மண்வள பாதிப்புகள் மற்றும் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

வெம்பாக்கம் வட்டார இந்தியன் வங்கியின் முதுநிலை மேலாளர் கே.சுப்பிரமணியன் வங்கி சார்ந்த வேளாண்மைக்கான திட்டங்கள் குறித்தும் தன்னுடைய அங்கக வேளாண்மை அனுபவங்கள் குறித்தும் பயனாளிகளிடையே
கலந்துரையாடினார். வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் ப.நாராயணன் திறன் மேம்பாட்டுப்பயிற்சியின் நோக்கம், பாடத்திட்டங்கள் பற்றியும் விவசாயிகளிடையே எடுத்துக் கூறினார்கள்.
பயிற்சி முகாமில் வெம்பாக்கம் வட்டாரத்திலிருந்து 25 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

The post அங்கக சாகுபடியாளர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மையத்தில் appeared first on Dinakaran.

Related Stories: