ஜூன் 4ல் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் மோடிக்கு 74 வயதில் ஓய்வு கொடுக்க மக்கள் முடிவு: மாணிக்கம் தாகூர் உறுதி

விருதுநகர்: ஜூன் 4ல் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் என மாணிக்கம்தாகூர் கூறினார்.

விருதுநகரில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அளித்த பேட்டி:
சிவகாசியில் பட்டாசு விபத்து தொடர்வது வருத்தத்திற்குரியது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, சிக்ரி விஞ்ஞானிகளுடன் இணைந்து விபத்தில்லாத பட்டாசு தொழிலாக மாற்ற முயற்சி எடுத்தார். அந்த முயற்சியை பாஜ அரசு கைவிட்டு விட்டது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் அந்த முயற்சி மீண்டும் தொடங்கப்படும்.

ஜூன் 4ல் டெல்லியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும். பாஜவில் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள் பொறுப்புகளை வகிப்பதில்லை. ஓய்வு எடுக்க வேண்டுமென்பது முடிவு. ஆனால் மக்கள் மோடிக்கு 74வது வயதில் ஓய்வு அளிக்க முடிவெடுத்து விட்டனர்.

அரசியல் மற்றும் மக்கள் பிரச்னை பற்றி பேசி முக்கிய முடிவு எடுக்க நீதிபதிகள் மதன், ஷா மற்றும் ராம் ஆகியோர், மோடி, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதினர். ராகுல்காந்தி வருவதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் மோடி தயங்குகிறார். தைரியம் இருந்தால் மோடி பங்கேற்க வேண்டும். தேர்தல் ஆணையம் பாஜவின் துணை அமைப்பாக மாறி பல நாட்கள் ஆகிவிட்டது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் தேர்தல் ஆணையம் பலம் பெறும்.

The post ஜூன் 4ல் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் மோடிக்கு 74 வயதில் ஓய்வு கொடுக்க மக்கள் முடிவு: மாணிக்கம் தாகூர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: