மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா: திரளான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு

மணப்பாறை: மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி ஏராளமான பெண்கள் இன்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். மாலை வேடபரி நிகழ்ச்சி நடக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 21ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக நேற்று பால்குட திருவிழா நடந்தது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இன்று காலை கோயில் வளாகத்தில் பொங்கல் விழா, மாவிளக்கு பூஜை நடந்தது. இதிரளான பெண்கள் கலந்துகொண்டு கோயில் முன் பொங்கலிட்டு வழிபட்டனர். பின்னர் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மேலும் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மாலை வேடபரி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வீரமணி, செயல் அலுவலர் அன்பழகன் செய்திருந்தனர்.

The post மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா: திரளான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: