ஆந்திராவில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு: பவன் கல்யாணுக்கு ராம்சரண் ஜெகன் கட்சி எம்எல்ஏவுக்கு அல்லு அர்ஜூன் பிரசாரம்


திருமலை: ஆந்திராவில் நாளை நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடிகர்கள் ராம்சரண், அல்லு அர்ஜூன் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது திரளான ரசிகர்கள் திரண்டு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து முக்கிய கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தேர்தல் பிரசாரத்தில் பிரபலங்களும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. பிரசாரத்தின் கடைசி நாள் என்பதால் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டனர்.

இந்த முறை திரையுலக பிரபலங்கள் பலரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் நந்தியாலா எம்எல்ஏ வேட்பாளராக போட்டியிடும் சில்பா ரவிச்சந்திர் வீட்டிற்கு நேற்று நடிகர் அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகாவுடன் சென்று வாகனத்தில் இருந்தபடியும், மாடியில் நின்றபடியும் பிரசாரம் செய்தார். அப்போது அல்லு அர்ஜூன் ரசிகர்களும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களும் திரளாக திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதேபோல் காக்கிநாடா மாவட்டம் பித்தாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணை ஆதரித்து அவரது அண்ணன் மகன் நடிகர் ராம்சரண் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து பிரசாரம் செய்தார். அப்போது நடிகர் ராம் சரணை காண ரசிகர்கள் திரண்டனர்.

The post ஆந்திராவில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு: பவன் கல்யாணுக்கு ராம்சரண் ஜெகன் கட்சி எம்எல்ஏவுக்கு அல்லு அர்ஜூன் பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: