ஓட்டுப்பதிவு முடிந்த இடங்களில் 1.07 கோடி வாக்குகள் அதிகரித்தது எப்படி: தேர்தல் ஆணையத்திற்கு காங். கேள்வி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா நேற்று தனது டிவிட்டரில், ‘‘மக்களவை தேர்தலின் 4 கட்ட வாக்குப்பதிவில் தேர்தல் ஆணையத்தில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகளால் வாக்காளர்கள் கவலை அடைந்துள்ளனர். முதலில் வெளியாகும் வாக்கு சதவீதத்திற்கும், இறுதி வாக்குப்பதிவு சதவீதத்திற்கும் இடையே 1.07 கோடி வாக்குகள் வேறுபாடு இருக்கிறது. இது உண்மையிலேயே முன்னெப்போதும் இல்லாதது. மாயமான வாக்கு இயந்திரங்கள் பற்றியும் விடை தெரியாத கேள்விகள் மிகவும் கவலை அளிக்கின்றன’’ என கூறி உள்ளார்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘ஒட்டுமொத்தமாக 1.07 கோடி வாக்குகள் வித்தியாசம் உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 28,000 வாக்குகள் இறுதி வாக்குப்பதிவு சதவீதத்தில் அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய வித்தியாசம். குறிப்பாக, பாஜ தோல்வி அடையும் என எதிர்பார்க்கப்படும் மாநிலங்களில் இந்த முரண்பாடு அதிகபட்சமாக உள்ளது. என்ன நடக்கிறது?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

The post ஓட்டுப்பதிவு முடிந்த இடங்களில் 1.07 கோடி வாக்குகள் அதிகரித்தது எப்படி: தேர்தல் ஆணையத்திற்கு காங். கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: