சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம்

ஓசூர், மே 7: தி.க சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு (1925-2024) தொடக்க விழா பொதுகூட்டம் நேற்று ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வனவேந்தன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சின்னசாமி வரவேற்றார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு, பெரியார் படத்தை திறந்து வைத்து பேசுகையில், ‘பெரியாரின் கொள்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடைபிடித்து வருகிறார். அதையே நாங்களும் கடைபிடித்து, பெரியாரின் சிந்தனைகள், கொள்கைகளை பரப்பி வருகிறோம்,’ என்றார். மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி துவக்கவுரையாற்றினார். மாநில துணை தலைவர் அண்ணா சரவணன், தலைமை கழக பேச்சாளர் காஞ்சி.கதிரவன் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் ஓசூர் மாநகர மேயர் சத்யா, தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி, மாநகர சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன், காங்கிரஸ் கட்சி மாநகர தலைவர் தியாகராஜன், திராவிடர் இயக்க எழுத்தாளர் பேராசிரியர் வணங்காமுடி, மார்க்சிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஜெயராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: