தேன்கனிக்கோட்டை அருகே மின்கம்பியில் சிக்கி மக்னா யானை பலி

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி பகுதியில் போதிய மழையில்லாததால் காடுகளில் வறட்சி ஏற்பட்டு உணவு, தண்ணீர் கிடைக்காமல் தினமும் யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. தளி பகுதியில் கடந்த மாதம் யானை தாக்கி 3 விவசாயிகள் பலியாகினர். இந்நிலையில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள மக்னா யானை ஒன்று தனியாக உணவு, தண்ணீர் தேடி சந்தனப்பள்ளி, குருபட்டி உள்ளிட்ட கிராம பகுதியில் சுற்றி வந்தது. யாருக்கும் தொந்தரவு செய்யாமல் வீடுகள் அருகே வாழை, தென்னை, பலா மரங்களில் காய்களை தின்று வந்தது. நேற்று அதிகாலை உணவு தேடி சென்ற ஒற்றை யானை, சந்தனப்பள்ளி ஏரி அருகே தாழ்வாக சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் சிக்கி உடலில் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்தது. இறந்த யானை தந்தம் இல்லாத 10 வயதுடைய மக்னா யானை. பிரேத பரிசோதனைக்குப்பின் அங்கேயே புதைக்கப்பட்டது.

The post தேன்கனிக்கோட்டை அருகே மின்கம்பியில் சிக்கி மக்னா யானை பலி appeared first on Dinakaran.

Related Stories: