மாஜி அரியானா முதல்வர் கட்டார் வேட்புமனுதாக்கல்

கர்னால்: மக்களவை தேர்தலில் போட்டியிடும் அரியானா மாஜி முதல்வர் மனோகர் லால் கட்டார் நேற்று வேட்புமனுதாக்கல் செய்தார். அரியானாவில் கடந்த 2014 முதல் பாஜ ஆட்சியில் முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் கடந்த மாதம் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அதன் பின்னர் நயாப் சிங் சைனி புதிய முதல்வரானார். பதவி விலகிய கட்டாருக்கு மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜ வாய்ப்பு வழங்கியுள்ளது. அரியானாவில் உள்ள கர்னால் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கர்னால் தொகுதியில் போட்டியிடுவதற்கு கட்டார் நேற்று வேட்புமனுதாக்கல் செய்தார்.

அவருடன் முதல்வர் நயாப் சிங் சைனியும் சென்றிருந்தார். அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கு வரும் 25ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதனிடையே டெல்லி வட கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் கன்னையா குமார் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். டெல்லி, நந்த்நகரியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் டெல்லி அமைச்சர் கோபால் ராய் சென்றிருந்தார். வட கிழக்கு டெல்லியில் பாஜ சார்பில் மனோஜ் திவாரி போட்டியிடுகிறார்.

* பிஎஸ்பி வேட்பாளர் மாற்றம்
உபி மாநிலம் ஜான்பூர் மக்களவை தொகுதியில் பிஎஸ்பி வேட்பாளராக மாஜி எம்பி தனஞ்செய் சிங்கின் மனைவி கலா ரெட்டி அறிவிக்கப்பட்டிருந்தார். தனஞ்செய் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆள் கடத்தல் வழக்கில் தனஞ்செய் சிங்குக்கு நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துள்ளது.இந்நிலையில் ஜான்பூர் தொகுதியில் முன்னாள் எம்பி ஷியாம் சிங் யாதவை வேட்பாளராக பிஎஸ்பி கட்சி நேற்று அறிவித்துள்ளது.

The post மாஜி அரியானா முதல்வர் கட்டார் வேட்புமனுதாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: